top of page
2.jpg

AROKIA NIKETAN

Institute for Marian Studies, Velankanni Tanjore Diocese Marian Institute | Since 1996

நிறுவனத்தின் வரலாறு

ஆரோக்கிய நிகேடன் என்கிற மரியியல் நிறுவனம், மேதகு பேராயர் பாக்கியம் ஆரோக்கியசாமி, தஞ்சை மறைமாவட்ட ஆயர் அவர்களது முன்முயற்சியால், 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முதல் இயக்குனராக அருள் முனைவர் ஆர். குழந்தைசாமி பொறுப்பேற்று மிகச் சிறப்பான அடித்தளமிட்டார். அவரைத் தொடர்ந்து நினைவில் வாழும் அருள்பணி. அருள்ராஜ் அவர்களும், அவரைத்தொடர்ந்து, அருள் முனைவர் பண்ணீர் செல்வம் மற்றும் அருள் முனைவர் அகஸ்டின் அவர்களும் உரோமையில் மரியியலில் தங்களது மேற்படிப்பை முடித்துத் தாயகம் திரும்பிய பிறகு மரியியல் நிறுவனத்தை சிறப்பாக வழி நடத்தினர். அவர்களைத் தொடர்ந்து மரியன்னை தியான இல்ல இயக்குனர்களே மரியியல் பயிலகத்திற்கும் பொறுப்பாக இருந்தனர்.

இங்கு ஓராண்டு பட்டயப் படிப்பும், ஒவ்வோர் ஆண்டும் பல சிறப்புக் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. பிறகு காலத்தின் தேவை கருதி வகுப்புகளுக்குப் பதிலாக கருத்தரங்குகளாக நடத்தப் பட்டன. பெருந்தொற்றுக் காலத்தில் கருத்தரங்குகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. காலத்தின் அருங்குறிகளை அறிந்தவர்களாய் நாம் புதிய அணுகு முறைகளை கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆசையோடும், தற்போதைய ஆயர் மேதகு முனைவர் சகாயராஜ் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து மீண்டும் பட்டயப் படிப்புகளைத் தொடர வேண்டும் என்று  வழிகாட்டினார். ஜனவரி மாதம் 2025 லிருந்து இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கின. 

 

முதலில் தஞ்சை மறைமாவட்டத்தில் உள்ள இறைமக்களுக்கான கருத்தரங்கிலிருந்து மரியியல் பயிலகச் செயல்பாடுகள் தொடங்கப்படவேண்டும் என்கிற விருப்பத்துடன், மறைவட்ட அளவில் ஒரு நாள் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து மே மாதத்தில் இரு நாள் கருத்தரங்குகள் நடத்தப்படவும் தீர்மாணிக்கப்பட்டது. 

 

மேலும் இந்தக் கல்வி ஆண்டிலிருந்து (2026- 2027) இணையவழி ஓராண்டு பட்டயப் படிப்பும், எதிர்வரும் கல்வி ஆண்டிலிருந்து (2026-2027) நேரடி வகுப்புகளும் தொடங்கப்படவும் இந்த நிறுவனம் உறுதி பூண்டிருக்கிறது.

bottom of page